சீனாவில் இரண்டாம் கொரோனா அலை வீசும் என மக்கள் அச்சம்

0 2732

கொத்து கொத்தாக கொரோனா தொற்று பரவுவதை தடுக்க, சீனாவின் வடகிழக்கில் அமைந்துள்ள ஜிலின்(Jilin) நகரின் எல்லைகள் மூடப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த நகரின் புறநகர்பகுதியான ஷுலானில் (Shulan) ஒரு குழுவினரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டது.

நிலைமை மோசமாக உள்ளது என தெரிவித்துள்ள நகர மேயர், தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், இன்டர்நெட் மையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

சீனாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை வீசும் என அஞ்சப்படும் நிலையில், இந்த நகரில் மட்டும் இதுவரை 21 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments