தனிநபர் இடைவெளியை மையப்படுத்தி செயல்படும் உணவகம்

0 1084

ஸ்வீடனில் தனிநபர் இடைவெளியை மையப்படுத்தி செயல்படும் உணவகம் ஒன்று வரவேற்பை பெற்றுள்ளது.

அந்நாட்டில் கொரோனா தொற்றால் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

நோய் பாதிப்பு மக்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ள நிலையில், அதற்கு முன்னுதாரணமாக ஒருவர் மட்டும் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் வேர்ம்லாந்தில் டேபிள் ஃபார் ஒன் என்ற உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திறந்த வெளி ஹோட்டலில் சப்ளையர் கிடையாது.

கூடை ஒன்றில் உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டு கயிறு மூலம் மேசைக்கு அனுப்பப்படுகிறது. தனிமையில் அமர்ந்து உணவு சாப்பிடுவதை இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகவும் ரசிப்பதாக உரிமையாளர்கள் ரஸ்முஸ் பெர்சன், லின்டா கார்ல்சன் தம்பதி தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments