பல்வேறு நலவாரியங்களின் உறுப்பினர்களுக்கு மேலும் ரூ.1000 நிதியுதவி

0 903
பல்வேறு நலவாரியங்களின் உறுப்பினர்களுக்கு மேலும் ரூ.1000 நிதியுதவி

பல்வேறு நல வாரியங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மேலும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக, 83 கோடியே 99 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு நலவாரியங்களின் உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மேலும் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், சிறுவணிகர்கள், பழங்குடியினர், கிராமிய கலைஞர்கள், பூசாரிகள், திரைத்துறையினர், நரிக்குறவர்கள், காதி, திருநங்கைகள், பட்டியலின வகுப்புகள் ஆகிய நலவாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள 8 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் பொருட்டு, 83 கோடியே 99 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments