விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து-விசாரணை நடத்த நிபுணர் குழுவை அனுப்பி வைத்தது சியோல் எல்ஜி பெட்ரோகெமிக்கல்ஸ்

0 576

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த 7 ஆம் தேதி 11 பேரை பலிவாங்கிய எல்ஜி ரசாயன ஆலை விபத்து பற்றி விசாரணை நடத்த சியோலில் உள்ள அதன் தலைமையகம் நிபுணர் குழுவை அனுப்பி வைத்துள்ளது.

தென் கொரியாவின் மிகப்பெரிய பெட்ரொகெமிக்கல் நிறுவனமான எல்ஜி கெம்முக்கு சொந்தமான எல்ஜி பாலிமர்ஸ் என்ற இந்த ஆலையில் விஷவாயு கசிந்து உயிர்ப்பலி ஏற்பட்டதுடன் 800 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்வதுடன், உள்ளூர் மக்கள் மற்றும் இந்திய அரசு அதிகாரிகளுடன் பேசி விளக்கம் அளிக்க சியோலில் உள்ள பெட்ரொகெமிக்கல்ஸ் வர்த்தக பிரிவு தலைவர் உள்பட 8 உறுப்பினர்கள் அடங்கிய குழு விசாகப்பட்டினம் சென்றுள்ளதாக எல்ஜி கெம் இன்று அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments