இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா.. 75 ஆயிரத்தை நெருங்குகிறது பாதிப்பு..!

0 1452
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 281ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 415ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 281ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 415ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 ஆயிரத்து 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கொரோனா நோய்க்கு 24 மணி நேரத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 281ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 415ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 47 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் 3 இடங்களை மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகியவை வகிக்கின்றன. இதில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 427ஆகவும், பலி எண்ணிக்கை 921ஆகவும் அதிகரித்துள்ளது. 2ம் இடத்திலுள்ள குஜராத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 903ஆகவும், பலி 537ஆகவும் உயர்ந்துள்ளது.

3ம் இடத்திலுள்ள தமிழ்நாட்டில் கொரோனா நோய் பாதிப்பு 8 ஆயிரத்து 718ஆகவும், பலி 61ஆகவும் உள்ளது. 4ம் இடத்திலுள்ள டெல்லியில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், 5ம் இடத்திலுள்ள ராஜஸ்தானில் பாதிப்பு 4 ஆயிரத்தை 100ஐ கடந்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 24 ஆயிரத்து 386 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 5 ஆயிரத்து 125 பேர் குணமாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments