தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

0 3481

வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கும், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, கரூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில், 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments