காஷ்மீர் வனப்பகுதியில் மறைந்திருந்த 4 தீவிரவாதிகள் கைது

0 463

காஷ்மீரில் தீவிரவாதச் செயலில் ஈடுபட முயன்ற ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

அவந்திபோரா பகுதியில் சில பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை அவர்கள் சுற்றி வளைத்தனர்.

ட்ரால் வனப்பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த சிலர் மறைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாசவேலையில் ஈடுபட திட்டம் தீட்டிய 4 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments