ஊரடங்கால் சுத்தமாகி கொண்டிருக்கிறது வானமும்,பூமியும்

0 1910

ஊரடங்கு காரணமாக பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் நிலக்கரியின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதையடுத்து 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவின் கார்பன் உமிழ்வு பெரிய அளவில் குறைந்துள்ளது.

பொது ஊரடங்கு, புதுப்பிக்கத்தக்க மின்சார நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவையே இதற்குக் காரணம் என்று எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று தொடர்பான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களாக நிலக்கரி மற்றும் பெட்ரோலிய தேவை குறைந்ததால் இந்தியாவில் கார்பன் உமிழ்வு 1. 4 சதவீதம் குறைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் டை ஆக்சைடின் உமிழ்வு மார்ச் மாதத்தில் 15 சதவீதமும், ஏப்ரல் மாதத்தில் 30 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியா, அதிகளவில் நிலக்கரியைப் பயன்படுத்தி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments