சென்னையில் கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர் உட்பட 5 பேருக்கு கொரோனா

0 1800

சென்னையில் கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர் உட்பட 5 மருத்துவ பணியாளர்களுக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்பட்டுள்ளது.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நர்ஸிங் சூப்பிரண்டாக பணிபுரியும் 53 வயதான பெண் அதிகாரிக்கும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் பார்க் டவுனில் உள்ள அரசு பல் மருத்துவமனை மருத்துவருக்கும், தனியார் பெண் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கடந்த ஒரு மாதமாக பணியில் இருந்த 53 வயதான மருத்துவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments