பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா

0 882

பெரம்பலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் உட்பட மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களின் உறவினர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 27 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தொற்று பாதித்தவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் கர்ப்பிணி பெண்கள் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 130ஐ தாண்டியுள்ள நிலையில், 7 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். 89 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments