கோரமுகம் காட்டும் கொரோனா.. பாதிப்பு 42.70 லட்சத்தை தாண்டியது..!

0 1485
உலகில் கொரோனா பலி எண்ணிக்கை 2.80 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோயால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

கொரோனா நோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் ஒருபக்கம் எடுக்கப்படும் நிலையில், மறுபக்கத்தில் அந்நோய் தொடர்ந்து கோரமுகத்தை காட்டி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்து 70 ஆயிரத்தையும், அந்நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் மருத்துவமனைகளில் 24 லட்சத்து 48 ஆயிரம் பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதில் 46 ஆயிரம் பேரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதுதவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுவரை மருத்துவ சிகிச்சையில் 15 லட்சத்து 34 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.((Gfx 1out))

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக இருப்பதால், பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 85 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 81 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 26 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 100ஆக உள்ளது.

பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. இதேபோல் அந்த 2 நாடுகளிலும் கொரோனா பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments