சென்னையில் ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றும் காவல் கூடுதல் ஆணையருக்கு கொரோனா

0 613

சென்னையில் ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றும் காவல் கூடுதல் ஆணையருக்கும், ஒரு துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள கூடுதல் ஆணையர், கோயம்பேட்டில் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தவர். தொற்று உறுதி செய்யப்பட்டதும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல, சென்னை போரூரை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த, தியாகராய நகர் காவல் மாவட்ட துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், துறைமுக காவல் உதவி ஆணையருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த 3 அதிகாரிகளின் குடும்பத்தினர், அலுவலக உதவியாளர்கள் மற்றும் கார் ஓட்டுநருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காவல் துறையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 130-ஐ கடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments