தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்-மு.க. ஸ்டாலின்

0 990

பாஜக ஆளும் மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளையும், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கைகளையும் வாபஸ் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொழிற்சாலைகள் திறக்கப்படுவதில் தவறில்லை என்று கூறியுள்ள அவர், அதே சமயம் தொழிலாளர்களின் உரிமைகளும், பணிப்பாதுகாப்பும், வாழ்வாதாரமும் கண்மூடித்தனமாக பறிக்கப்படுவதை திமுகவால் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளதை ரத்து செய்ய மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments