அணி தொடர்பான முடிவில் பாகுபாடு காட்டாதவர் தோனி: ஆர்.பி. சிங்

0 1913

அணி தொடர்பான முடிவு எடுக்கையில் வீரர்கள் இடையே தோனி எப்போதும் பாகுபாடு காட்டியதில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி சிங் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் அணியில் இர்பான் பதானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, ஆர்.பி சிங் நீக்கப்பட்டார். அப்போது ஆர்.பி சிங்கை அணிக்கு தேர்வு செய்ய தோனி விரும்பியதாக செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஆர்.பி சிங் தற்போது அளித்த பேட்டியில் தோனி எந்த பாகுபாடும் காட்டாத   நேர்மையான கேப்டன் என்றும், தமது திட்டங்களை யார் பின்பற்றுவார்களோ அவர்களை எப்போதும் ஊக்குவிக்கும் தன்மை கொண்டவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணிக்கு தாம் தேர்வு செய்யப்படாதது வருத்தத்தை அளித்ததில்லை எனவும் ஆர்.பி சிங் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments