தியாகராய நகர் காவல் துணை ஆணையருக்கு கொரோனா தொற்று

0 699
சென்னையில் இதுவரை 130க்கும் மேற்பட்ட போலீசாருக்கு பாதிப்பு

சென்னை தியாகராய நகர் காவல் மாவட்ட துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் அவரது குடும்பத்தினருக்கும், தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அவருடன் பணியிலிருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதே போல் துறைமுக காவல் உதவி ஆணையருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை சென்னையிலுள்ள 4 காவல் மாவட்டங்களிலும் ஐபிஎஸ் அதிகாரி முதல் காவலர் வரை 130க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments