சென்னையில் கொரோனா பாதிப்பு 4,371ஆக அதிகரிப்பு

0 815

சென்னையில் கொரோனா மையமாக திகழும் ராயபுரத்தில் பாதிப்பு 742ஆக அதிகரித்துள்ளது.

15 மண்டலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 371ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரத்துக்கு அடுத்துகோடம்பாக்கம் மண்டலத்தில் 713 பேரும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 590 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு மண்டலங்களிலும் 743 பேர் குணமடைந்து உள்ள நிலையில் 32 பேர் பலியாகியுள்ளனர். சென்னையின் பல்வேறு மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோரே மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னையில் கொரோனா பாதித்தோரில் 62 புள்ளி 14 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர். எஞ்சியோரில் 37 புள்ளி 83 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments