கொரோனா பாதிப்பு 70,700ஐ தாண்டியது

0 1099

நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 700ஐ தாண்டியுள்ளது. கொரோனா தொற்று நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 ஆயிரத்து 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கொரோனா நோய்க்கு 24 மணி நேரத்தில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 756ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 293ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 8 பேர் ((46008)) சிகிச்சை பெறுகின்றனர். .

 நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான் ஆகியவை முதல் 5 இடங்களை வகிக்கின்றன. முதலிடத்திலுள்ள மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 401ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 868ஆக உயர்ந்துள்ளது.

2ம் இடத்தில் உள்ள குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 541ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 513 ஆக அதிகரித்துள்ளது. 3ம் இடத்திலுள்ள தமிழ்நாட்டில்
பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 2ஆகவும், பலி எண்ணிக்கை 53ஆகவும் உயர்ந்துள்ளது. 4ம் இடத்தை வகிக்கும் டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 233ஆகவும், பலி எண்ணிக்கை 73ஆகவும் உள்ளது.

5ம் இடத்தை வகிக்கும் ராஜஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 988ஆகவும், பலி எண்ணிக்கை 113ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 22 ஆயிரத்து 455பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 4 ஆயிரத்து 786 பேர் குணமாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments