பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து

0 1401
பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது பிறந்த நாளில் வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சேவையில் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அவருக்கு இறைவன் அருளட்டும் என பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதேபோல, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். அவர் இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் இறைவனை பிரார்த்திப்பதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments