மாநிலத்திற்குள் பயணம் செய்ய லாக் டவுன் பாஸ் தேவை இல்லை - ராஜஸ்தான் அரசு

0 406

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரங்களில் மாநிலத்திற்குள் பயணம் செய்ய ‘லாக்டவுன் பாஸ்’ தேவை இல்லை என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறுகையில்,மாவட்டங்களுக்கு இடையேயும், அதன் உள்ளேயும் போக்குவரத்திற்காக பயணம் செய்ய எந்தவித அனுமதியும் பெறத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்றாடம் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரமான காலை 7மணி முதல் மாலை 7மணி வரை மட்டுமே பாஸ் இன்றி பயணிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசதி கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி தடை உள்ள மாவட்டங்களிலும் அதன் பகுதிகளிலும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments