தஞ்சை நெட்டிவேலை, அரும்பாவூர் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு

0 2493
தஞ்சை நெட்டிவேலை, அரும்பாவூர் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு

ஆயிரம் ஆண்டு தொன்மையான தஞ்சாவூர் நெட்டிவேலை மற்றும் 250 ஆண்டுகள் பழமையான அரும்பாவூர் மரச்சிற்பங்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சை மற்றும் மன்னார்குடி பகுதிகளில் கிடைக்கும் நெட்டி தாவரத்தை பதப்படுத்தி கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தஞ்சை பெரியகோவில், சாமி சிலைகள், மாலைகள், தோரணங்கள், கலைநயமிக்க பொருட்கள் போன்றவைகளை கைவினைக் கலைஞர்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கின்றனர்.

அதேபோன்று, அரும்பாவூர் மற்றும் வேப்பந்தட்டை பகுதிகளில் உள்ள மரங்களில் இருந்து பொம்மைகள், தேர்கள் மற்றும் விதவிதமான சிற்பங்களை உருவாக்குகின்றனர். தமிழக கலைஞர்களின் கைவண்ணத்தில் செதுக்கப்படும் இந்த சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கோரி தமிழக கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளதன் மூலம் தமிழக கலைஞர்களின் கலைத்திற வெளிப்பாடுகள் சர்வதேச அளவில்புகழ்பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments