என்று தணியும் கொரோனா பாதிப்பு ? உயரும் உயிர்ப்பலியால் மிரளும் உலக சமூகம்

0 862

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து சுமார் 15 லட்சம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். ரஷியாவில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப் படுவது, 9 - வது நாளாக நீடித்துள்ளது.  

அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 538 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 71 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு, ஒரே நாளில் 91 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 81 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ரஷியாவில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 656 பேர் பாதிக்கப்பட, உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டி விட்டது. 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுவது, ரஷியாவில் இது 9 வது நாளாகும்.இங்கிலாந்தில் ஒரே நாளில் 210 பேர் பலி ஆனதால் உயிரிழப்பு 32 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 877 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

இத்தாலியில் உயிரிழப்பு 30 ஆயிரத்து 500 ஐ தாண்ட, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.ஸ்பெயினில் ஒரே நாளில் 3ஆயிரத்து 4 80 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 123 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு இரை ஆனோர் 26 ஆயிரத்து 700 ஐ தாண்டி உள்ளது.

பிரான்சில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 300 ஐ தாண்டிவிட்டது.பிரேசிலில் ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 600 ஐ எட்டி உள்ளது.

பெல்ஜியத்தில் ஒரே நாளில் 51 பேர் இறந்ததால், உயிரிழப்பு 8 ஆயிரத்து 700 ஐ தாண்டிவிட்டது.பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 607 பேரும், சிலியில் ஆயிரத்து 197 பேரும், பெலாரஸில் 933 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 2 லட்சத்து 84 ஆயிரத்து 850 ஆக உயர, வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 21 ஆயிரத்து 927 ஐ எட்டி உள்ளது.சுமார் 47 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்க, 15 லட்சத்து 9 ஆயிரத்து 420 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments