செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 4060
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது.

பரங்கிமலை, நந்திவரம், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், அச்சரப்பாக்கம், பவுன்சூர், சூனாம்பேடு, சட்ராஸ் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இந்த 91 பேரும் கோயம்பேடு சந்தை சென்று வந்ததால் தொற்று பாதித்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

தொற்று பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து மேலும் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments