நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல்

0 1308
நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

87 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலி காரணமாக ஞாயிறு இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருந்து கொடுத்ததால் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மன்மோகன் குடும்பத்துக்கு நெருங்கிய ஒருவர் நாளேட்டுக்கு அளித்த தகவலில், மன்மோகன் சிங் நலமுடன் உள்ளதாகவும், இருப்பினும் பாதுகாப்புக் கருதி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மன்மோகன் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் எனத் தலைவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments