வாட் வரியை மூன்று மடங்கு உயர்த்தும் சவூதி அரேபியா

0 7357

சவூதி அரேபிய அரசு, வாட் வரியை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதோடு, வாழ்க்கைச் செலவுகளுக்கான படி வழங்குவதை நிறுத்திவைக்கிறது.

கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி, கொரோனா கட்டுப்பாடுகளால் பொருளாதார செயல்பாடுகள் முடக்கம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவு என மும்முனைத் தாக்குதலை சவூதி அரேபிய பொருளாதாரம் எதிர்கொண்டு வருகிறது.முதல் காலாண்டில் 9 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பட்ஜெட் பற்றாக்குறை விழுந்துள்ளது.

இந்நிலையில் சிக்கன நடவடிக்கைகளை சவூதி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவுகளுக்கான படி வழங்குவது ஜூன் முதல் நிறுத்திவைக்கப்படுகிறது. வாட் வரி ஜூலை முதல் 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments