ஊரடங்குக்குப் பின் சமூக இடைவெளியுடன் குறைந்த பயணிகளுடன் பேருந்துகளை இயக்க முடிவு

0 13814

ஊரடங்குக்குப் பின் போக்குவரத்து தொடங்கும்போது அதிக அளவாகப் பேருந்தில் 25 பேரும், மெட்ரோ ரயிலில் 160 பேரும் செல்லலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடிந்த பின் சென்னையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் ஆகியவற்றை இயக்குவதற்கான நடைமுறைகளை நிர்வாகங்கள் முன்கூட்டித் திட்டமிட்டு வருகின்றன.

தொடக்கத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளை இயக்குவது என்றும் அவற்றிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 20 பேர் அமர்ந்தும், 5 பேர் நின்றும் பயணிக்கச் செய்வது என்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தீர்மானித்துள்ளது.

இதேபோல் மெட்ரோ ரயிலில் ஒருமுறை 4 பெட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 160 பேரை ஏற்றிச் செல்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கைக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நடத்துநர்களுக்கும், அலுவலர்களுக்கும் மிகவும் சிக்கலான பணியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments