அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்க்கு கொரோனா பாதிப்பு இல்லை-பரிசோதனையில் உறுதி

0 648

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்க்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் வெள்ளை மாளிகை பணியில் இன்று முதல் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர் ஒருவருக்கும், துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தித் தொடர்பாளர் கேட்டி மில்லருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அதிபரும், துணை அதிபரும் நாள்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் நோய் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டப்பட்ட பின்னர் அதிபர் ட்ரம்ப் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், துணை அதிபர் மைக் பென்சும் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஓ மெலி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments