திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா உறுதி

0 921

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றுவரை அம்மாவட்டத்தில் 337 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 381 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 320 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தனி வார்டுகள் அமைக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments