தமிழகம் முழுவதும் டீக்கடைகள் திறப்பு..!

0 2460

கடந்த 47 நாட்களாக மூடப்பட்டிருந்த தேநீர்க் கடைகள் இன்று காலை திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் தேநீர்க்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று முதல் டீக்கடைகளைத் திறக்கலாம் என்றும், காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தேநீர்க் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. அரசின் அறிவுறுத்தலின் படி, தேநீர் வாங்க வந்தவர்களுக்கு பார்சலில் மட்டுமே விநியோகிக்கப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments