47 நாட்களாக வேலைக்கு செல்லாமல்.. கூலித் தொழிலாளர்கள் தவிப்பு..!

0 2163

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக, கடந்த 47 நாட்களாக வேலைக்கு செல்லாததால் ஏழை கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.... 

தமிழகத்தில் ஊரடங்கு 47 நாட்களை கடந்துள்ள நிலையில், அரசு வழங்கிய 1000 ரூபாய் நிதி மற்றும் விலையில்லா அரிசி போன்றவை கிடைக்க பெற்றாலும், தினமும் கிடைக்கின்ற கூலியை நம்பி பிழைப்பு நடத்தி வந்த ஏராளமான ஏழை கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் அன்றாட தேவைகளுக்கே கடுமையாக திண்டாடி வருவதாக வேதனை தெரிவித்தனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகர் பகுதியில் ஏராளமான மக்கள், தங்கள் வாழ்வதாரத்தை இழந்து தவித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்

இயல்பு நிலை திரும்பும் வரை தங்களுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்

அரசு நிவாரணம் வழங்கினாலும், அள்ளிக்கொடுக்கும் மனம் கொண்டோர் தங்கள் பகுதிக்கும் மளிகைப் பொருட்கள், காய்கறி போன்றவற்றை வழங்கினால் பேருதவியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு தற்போது கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு ஏதாவது வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர் பாதிக்கப்பட்ட மக்கள்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments