இந்தியா முழுவதும் 428 ரயில்கள் மூலம் 4.5 லட்சம் தொழிலாளர்கள் இடமாற்றம்

0 1697
72 இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியில் 54 பேர் மட்டுமே அனுமதி

ஊரடங்கினால் அவதிப்படும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் 428 ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், திருச்சி, டிட்லாகர், சாப்ரா, பாலியா, கயா, பூர்ணியா, வாரணாசி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் பயணித்து சொந்த ஊர்களைச் சென்றடைந்துள்ளதாகக் கூறினர்.

மேலும் இந்த சிறப்பு ரயில்களில் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் 72 இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியில் 54 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், அனைத்துப் பெட்டிகளிலும் நடு படுக்கை வசதியை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments