உலகளவில் இதுவரை 14 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்

0 1011

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து 14 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டு உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் கடந்த 10 நாட்களில் 18 ஆயிரம் பேரை கொரோனா காவு வாங்கி விட்டது. ரஷியாவை பொறுத்தவரை, 8-வது நாளாக 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்...

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

அமெரிக்காவில், பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 67 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு, ஒரே நாளில் 800 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 80 ஆயிரத்தை எட்டி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 18 ஆயிரம் பேர், கொரோனாவால் பலி ஆகி உள்ளனர்.

இங்கிலாந்தில் உயிரிழப்பு 31 ஆயிரத்து 800 ஐ தாண்டி உள்ளது.

இத்தாலியில் உயிரிழப்பு 30 ஆயிரத்து 500 ஐ தாண்ட, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் ஒரே நாளில் ஆயிரத்து 880 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 143 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு இரை ஆனோர் 26 ஆயிரத்து 600 ஐ எட்டி உள்ளது.

பிரான்சில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 300 ஐ தாண்டி விட்டது.

பிரேசிலில் ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பெல்ஜியத்தில் ஒரே நாளில் 75 பேர் இறந்ததால், உயிரிழப்பு 8 ஆயிரத்து 600 ஐ தாண்டிவிட்டது.

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 700 -ஐ நெருங்க, உயிர்ப்பலி 7 ஆயிரத்து 500 ஐ தாண்டி விட்டது.

ஈரானில் கொரோனா உயிரிழப்பு 6 ஆயிரத்து 600ஐ எட்டி உள்ளது.

ரஷியாவை பொறுத்தவரை, 8 - வது நாளாக 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 12 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. அங்கு ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை ஆயிரத்து 916ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர, துருக்கி, கனடா, நெதர்லாந்து, பெரு, ஸ்வீடன், மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிர்ப்பலியும் கணிசமாக உயர்ந்து வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 2 லட்சத்து 83 ஆயிரத்து 852 ஆக எட்ட, வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து 80 ஆயிரத்து 137 ஐ
எட்டி உள்ளது.

சுமார் 47 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்க, 14 லட்சத்து 90 ஆயிரத்து 590 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

இதனிடையே, கொரோனாவின் 2ஆவது அலை இந்தாண்டு இறுதியில் மீண்டும் தாக்கும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments