அமெரிக்காவில் பல வாரங்களுக்குப் பின் கொரோனா உயிரிழப்பு குறைவு

0 4358
வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது

அமெரிக்காவில் பல வாரங்களுக்குப் பின் கொரோனாவால் ஏற்பட்டுவந்த உயிரிழப்பு குறைந்துள்ளது. ஆயினும் அங்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசின் மையப்புள்ளியான அமெரிக்காவில் பலி எண்ணிக்கை தினசரி ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரை நீடித்து வந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் அச்சமடைந்தனர். இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800க்கும் குறைவாகவே பதிவானது.

மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 20 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது. இதன்காரணமாக அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 66 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இவர்களுடன் 16 ஆயிரத்து 500 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க கடற்படை நடவடிக்கைக் குழுவின் தலைவர் அட்மிரல் மைக்கேல் கிளாடிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே துணை அதிபர் மைக் பென்சுசின் செய்தித் தொடர்பாளருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டாலும், பென்ஸ் வெள்ளை மாளிகையில் தொடர்ந்து பணியாற்றுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களைப் போலவே சுகாதாரம் மற்றும் மனிதவளம் மற்றும் அறுவைசிகிச்சைப் பிரிவு தலைவர் ஆகியோரும் கொரோனா தாக்கம் இருந்தாலும் அலுவலகத்தில் பணியாற்ற உள்ளனர்.

இங்கிலாந்தில் அத்தியாவசியமற்ற பணிகளில் உள்ள ஊழியர்கள் பணிக்குத் திரும்பலாம் என அரசு கூறியிருப்பது முட்டாள்தனமான நடவடிக்கை என்று அந்நாட்டு வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், தான் வைத்திருக்கும் திட்டங்களை நிறைவேற்றினால் அடுத்த சில வாரங்களில் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லமுடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பள்ளிகளை திறக்கவும், வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments