தாராவி பகுதியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 பேர் பலி

0 1044
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிராவும், அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக மும்பையும் திகழ்கின்றன.

இதில் மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமாக திகழும் ஜனநெருக்கடி அதிகமுள்ள தாராவியில் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தபடியே உள்ளது. இன்று ஒரே நாளில் தாராவியில் கொரோனாவால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தாராவியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 859ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா நோய்க்கு இன்று ஒரே நாளில் 2 பேர் பலியானதால், தாராவியில் அந்த நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments