2,570 செவிலியர்கள் அடுத்த 3 நாட்களுக்குள் பணியமர்த்தப்பட உள்ளனர்

0 1432
மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் மெரிட்டில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் உள்ள 2 ஆயிரத்து 570 செவிலியர்கள் அடுத்த 3 நாட்களுக்குள் பணியமர்த்தப்பட உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவைக்கேற்ப 40 முதல் 100 செவிலியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும் நாட்டிலேயே தமிழகத்தில் கொரோனாவால உயிரிழந்தோர் விகிதம் குறைவாக இருப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments