ஊரடங்கு தளர்வுக்குப் பின் 20000 தொழிலாளர்களை கிராமங்களில் இருந்து அழைத்து வர முடிவு

0 4587
ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும், போதிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இல்லை என்பதால், பல தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை துவக்க முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும், போதிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இல்லை என்பதால், பல தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை துவக்க முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே கர்நாடகாவில் உள்ள தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான உதவியை செய்யுமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளன.

இதை அடுத்து பெங்களூரு மற்றும் மாநிலத்தின் இதர நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சுமார் 20000 தொழிலாளர்களை அவர்களின் கிராமங்களில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரும் பணி தொடங்கப்பட உள்ளது.

இவர்கள் பேருந்துகளில் வருவதற்கு தேவையான அனுமதியை வழங்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments