டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் : டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்

0 1029
எந்த தேர்வும் ரத்து செய்யப்படாது என்றும், திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தெரிவித்துள்ளது.

எந்த தேர்வும் ரத்து செய்யப்படாது என்றும், திட்டமிட்டபடி  அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 144 தடை அமல்படுத்தப்பட்டு,  பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதும் நீட்டிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களினால்,  டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்   நடைபெறுமா என கேள்வியெழுந்துள்ளது.

இந்நிலையில்,  2020-ம்  ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் தேர்வுகள் ரத்தாக வாய்ப்புள்ளது என்ற தகவல் தவறானது எனவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments