மாஸ்கோவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தீ

0 445

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

வடக்கு மாஸ்கோவில் உள்ள ஸ்பாசோகுகோட்ஸ்கி மருத்துவமனை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்பொருட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளநிலையில், அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்ட நிலையில், ஒரு நோயாளி மட்டும் தீயில் சிக்கி உயிரிழந்ததாக மேயர் செர்ஜி சோபியானின் உறுதி படுத்தியுள்ளார். அப்புறப்படுத்தப்பட்ட நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments