முதலமைச்சரின் தொகுதியிலுள்ள ஏழைகளுக்கு விலையில்லா அரிசி

0 725

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பாக, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதியில்  90 ஆயிரம் ஏழை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அடங்கியிருக்கும் எடப்பாடி நகரம், எடப்பாடி ஒன்றியம், கொங்கணாபுரம் ஒன்றியம், நங்கவள்ளி ஒன்றியம், பூலாம்பட்டி பேருராட்சி, கொங்கணாபுரம் பேருராட்சி, ஜலகண்டாபுரம் பேருராட்சி, நங்கவள்ளி பேருராட்சி மற்றும் வனவாசி பேருராட்சி பகுதிகளில்
வசிக்கும் ஏழை எளிய நடுத்தர 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமது சார்பில் விலையில்லா அரிசி சிப்பத்தை வழங்குமாறு, அந்த அந்த பகுதி அதிமுக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.

தம்முடைய அறிவுறுத்தலின்படி, அதிமுக சார்பில் 3 நிர்வாகிகள் மட்டுமே முகக்கவசம் அணிந்து, சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் சமூக இடைவெளியினைப் பின்பற்றி நிவாரண உதவிகளை வழங்கி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments