இந்தியாவில் வன்முறையைத் தூண்ட பாக். உளவு அமைப்பு சதி

0 751

இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்கு தீவிரவாத குழுக்கள் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்காக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் காலிஸ்தானி என்ற குழுவை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஊக்குவிப்பதும் அம்பலமாகி இருப்பதாக என்ஐஏ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்புச் சாக்குகளில் போதைப் பொருள் மறைத்து வைத்து கடத்தப்படுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான பணம் கூரியர் அல்லது ஹவாலா மூலம் செலுத்தப்படுவதும் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட அனைத்து காலிஸ்தானிய தலைவர்களும் ஐ.எஸ்.ஐ உடன் இணைந்து இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதில் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments