இந்தியாவில் 62,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

0 973

இந்தியாவில் கொரோனா நோயால் பாதித்தோரின் எண்ணிக்கை 62 ஆயிரத்தையும், பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 100-யும் தாண்டியுள்ளது. கொரோனா நோயிலிருந்து குணமானோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 358ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 ஆயிரத்து 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கொரோனா நோய்க்கு 24 மணி நேரத்தில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 939ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 109 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 41 ஆயிரத்து 472 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 

மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 228ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 779ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 796ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 542ஆகவும், பலி எண்ணிக்கை 73ஆகவும் உயர்ந்துள்ளது.

இதேபோல் தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்,தெலுங்கானா, உத்தர பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அந்த மாநிலங்களில் கொரோனா நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ((gfx 2out))

நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 19 ஆயிரத்து 358பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3 ஆயிரத்து 800 பேர் குணமாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments