சத்தீஸ்கார் முன்னாள் முதலமைச்சர் அஜித்ஜோகி மருத்துவமனையில் அனுமதி

0 416

சத்தீஸ்கார் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கார் மாநிலத்தின் முதலமைச்சராக 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் வரை பதவி வகித்தவர் அஜித் ஜோகி. ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர் கட்சியை தொடங்கிய இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பிரச்சனை உள்ளதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments