இந்தியாவுடன் நட்புறவாக இருக்க விரும்புவதாக தாலிபான்கள் அறிவிப்பு

0 10943

இந்தியாவுடன் நட்புறவாக இருக்க விரும்புவதாக தாலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் அரசியல் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், தங்களின் தேசிய நலன் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பெற விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் ஆப்கானிஸ்தானை புனரமைப்பதில் இந்தியாவின் ஒத்துழைப்பை வரவேற்பதாகவும் சுஹைல் தெரிவித்துள்ளார். அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள தங்கள் நாட்டை மீட்கவே போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தங்களில் எல்லைக்கு அப்பால் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று கூறினார். தீவிரவாதிகளாக இருக்கும் தாலிபான்கள் தற்போது அமைதி குறித்து பல்வேறு நாடுகளுடன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments