அமெரிக்காவில் கொரோனாவுக்கு 80,000 ஐ கடந்தது உயிரிழப்பு

0 1313
வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 1500 பேர் உயிரிழந்த பரிதாபம்

அமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்றினால் 24 மணி நேரத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளாதால் அந்நாட்டில் மரணித்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் நோய்த்தொற்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத் தாக்கியது.அந்நாட்டில் இதுவரை 13 லட்சத்து 46 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16 ஆயிரம் பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரே நாளில் ஆயிரத்து 500 பேர் உயிரிழக்க, இதுவரை பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் தட்டுப்பாட்டினைப் போக்க விவசாயிகளிடமிருந்து 22 ஆயிரம் கோடி அளவில் உணவுப் பொருளை வாங்க அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளது. ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் மக்கள், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் சுயநலத்துடன் நடந்து கொள்வதாகக் மாகாண ஆளுநர் விமர்சித்துள்ளார். அதே நேரம் ஜார்ஜியாவில் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதாக ஆளுநர் பிரய்ன் கெம்ப் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் அவசரகால பொதுமுடக்கத்தை ஜூலை மாதம் 10ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

தென்கொரியாவில் மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காததாலும், வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாகவும் நாடு முழுவதும் உள்ள 2 ஆயிரம் பார்கள், இரவு விடுதிகள் மற்றும் நடன அரங்கங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை ஈடுசெய்ய சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயிற்சி ஆகியவற்றை ஊக்குவிக்க இங்கிலாந்து அரசு 2 புள்ளி 4 பில்லியன் டாலர் தொகுப்பை அறிவிக்க முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments