சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது தடியடி

0 6091
சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரிக் குஜராத்தின் சூரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரிக் குஜராத்தின் சூரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

குஜராத்தின் சூரத்தில் உள்ள ஹாசிரா தொழிற்பேட்டையில் காலை எட்டு மணியளவில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடினர்.

45 நாட்களுக்கு மேல் வேலையின்றி வருமானமின்றிச் சிக்கிக் தவிக்கும் தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரி முழக்கமிட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களைக் கலைந்துபோகுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்துத் தொழிலாளர்கள் கல்லெறிந்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வெடிக்கச் செய்து விரட்டியடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments