நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு

0 1734
கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ஆத்துப்பாலத்தில் பிப்ரவரி 22ம் தேதி  நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மத்திய அரசு மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அவரதூ பேச்சு ஆட்சேபகரமாக இருப்பதாகக் கூறி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசத்துரோகம், இரு பிரிவினருக்கிடையே விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய இரு பிரிவுகளில் குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments