பல ஆண்டுகளுக்குப் பின் குஞ்சு பொறித்த மோர்போர்க் ஆந்தை

0 687

ஆஸ்திரேலியாவில் மிகவும் அபூர்வ வகையைச் சேர்ந்த ஆந்தை ஒன்று குஞ்சு பொறித்துள்ளது வன உயிரின ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மோர்போர்க் எனப்படும் ஆந்தை வகை நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் ஆந்தை வகையாகும். இந்த ஆந்தைகள் டாஸ்மேனியா அருகில் உள்ள நார்போல்க் என்ற தீவில் கடந்த பல ஆண்டுகளாக 40 முதல் 50 என்ற எண்ணிக்கையில் இருந்தன.

மேலும் சில பெண் ஆந்தைகள் முட்டையிடாமலும், குஞ்சு பொறிக்காமலும் இருந்து வந்தன. இது குறித்து உயிரியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தி வந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட தீவில் ஒரு பெண் ஆந்தை இரு குஞ்சுகளை பொறித்துள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட குஞ்சுகளைக் காப்பாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments