அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் - மதிமுக பொது செயலாளர் வைகோ

0 7372

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டை செயல்படாததால், அங்குள்ள நிறுவனங்களால் உதிரிபாகங்களை தயாரிக்க முடியாதநிலை காணப்படுகிறது எனவும், இதனால் பெரு நிறுவனங்கள், அங்கிருந்து உதிரிபாக கொள்முதலை மாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை மக்கள் நடமாட்டமில்லாத பகுதி, அங்கு பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்களும் உள்ளேயே தங்கியுள்ளனர் என கூறியுள்ள வைகோ, அங்கு தொழில்களை இயக்குவதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும், ஆதலால் திங்கள்கிழமை முதல் செயல்பட அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments