மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1158

மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு இதுவரை கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 5 போலீசார் மரணமடைந்து விட்டதாகவும் அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 714 போலீசாரில் 81 பேர் அதிகாரிகள் எனவும், 633 பேர் காவலர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 714 போலீசாரில் 5 பேர் மரணமடைந்து விட்ட நிலையில், 648 பேர் சிகிச்சை பெறுவதாகவும், மேலும் 61 பேர் குணமடைந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் மீது 194 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதில் 73 போலீசார் உள்பட 74 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ள மகாராஷ்டிர காவல்துறை, இச்சம்பவங்கள் தொடர்பாக 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளிடம் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments