தென்கொரியாவில் இருந்து சென்னைக்கு 1 லட்சம் பிசிஆர் கிட்கள் இறக்குமதி...

0 2671

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

மேலும் 10 லட்சம் பிசிஆர் கிட்களுக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனையை சுகாதாரத்துறையை விரிவுபடுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் பிசிஆர் கிட்கள் தென்கொரியாவில் இருந்து வந்துள்ளன. ஏற்கெனவே உள்ள 1.2 லட்சம் பிசிஆர் கிட்களுடன், கூடுதலாக 1 லட்சம் கருவிகளைக் கொண்டு சோதனையை விரைவு படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் 10 லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகளைப் பெறுவதற்கு தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கிட்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மூலம் பெறப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments