மும்பையில் காவல்துறையினருக்கு கொரோனா பரவியதால் ராணுவம் அழைக்கப்படுமா?

0 1329
மும்பையில் காவல்துறையினருக்கு கொரோனா பரவியதால் ராணுவம் அழைக்கப்படுமா?

மும்பையில் காவல்துறையினர் பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருவதால் பாதுகாப்பு பணிக்கு ராணுவம் வரப்போவதாக வெளியான தகவல்களை மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மறுத்துள்ளார்.

மொத்தம் 160 போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.காவல்துறையினர் கடும் நெருக்கடியில் பணியாற்றி வந்தாலும் ராணுவத்தை அழைக்க வேண்டிய அவசியம் எழவில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் இதுவரை சுமார் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய எண்ணிக்கை என்று கூறிய தாக்கரே, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே புனேயருகே உள்ள டோன்ட் பகுதியில் 15 போலீஸ்காரர்களுக்கு கொரோனா பரவியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments